கணினி அறிவியல் தொடர்பான கல்வி பயிலும் மாணவர்களுக்கு கணினி ஆய்வகம் என்பது பாடத்திட்டத்தில் அவசியமாக இருக்கக் கூடிய ஒன்று.
தமிழ அரசு தமிழக மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் மடிக்கணினி கொடுத்த பிறகு இன்று கணினியினை பயன்படுத்தும் மாணவர்களின் விகிதம் நேர்க்கோட்டு வித்தியாசத்தில் உயர்ந்திருக்கிறது.
தட்டச்சு செய்தல் என்பது கணினியினைப் பொறுத்தமட்டில் தவிர்க்க முடியாதது, அவசியமானது.
பள்ளியில் அறிவியல் ஆய்வகம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் அனைத்து விதமான அறிவியல் உபகரணங்கள், ரசாயன உப்புகள், அறிவியல் செய்முறைப் பயிற்சிக்கு தேவையான மூலப்பொருட்கள் அனைத்தும் உள்ளன.
1962ம் ஆண்டு ஜீன்18ம் தேதி துவங்கப்பட்ட பள்ளி தான்நமது காளப்பட்டிஅரசு உயர்நிலைப்பள்ளி. மாணவர்களுக்கான பயிற்சியையும், நம்பள்ளியில் கொடுக்கும் ஊக்கத்தையும் கண்டு 2006 ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாகத்தரம் உயர்த்தப்பட்டது.
தனியார் பள்ளிகளுக்கு போட்டியாகவிளங்குகிறது நம் அரசு பள்ளி. அரசு பள்ளியில் படிக்கும்மாணவர்கள் குடும்ப சூழ்நிலைகாரணமாக பள்ளிக்கு வருவது குறைந்து வந்தாலும் நமது ஆசிரியர்களும், தலைமைஆசிரியரும்எடுத்த சீரிய முயற்சியில் பல மாணவர்களுக்கு படிக்கும் சூழ்நிலையைஉருவாக்கி உள்ளது நம் காளப்பட்டி அரசு பள்ளி.
நம் பள்ளியில்படிப்பை மட்டும் சொல்லித்தராமல் எவ்வாறு படிக்க வேண்டும், என்னபடித்தால் எந்த நிலையை அடையளாம் என்றும், என்னென்ன படிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு கற்றுத்தருகின்றனர் நமது ஆசிரியர்கள்.
படிப்பைதவிர விளையாட்டிலும் நம் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து அவர்கள் பலபோட்டிகளில் வெல்லவும் உறுதுணையாக நிற்கின்றனர் ஆசிரியர்கள். விளையாட்டு, மேல் படிப்பிற்கும் அரசு பதவிகளுக்கும் எவ்வாறு உதவும் என உணர்த்தும்ஆசிரியர்களை கொண்டது நம் பள்ளி.
பத்தாம் வகுப்பு:-
2014 -2015 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில்
முதல்மதிப்பெண்482. அதே கல்வி ஆண்டில் தேர்ச்சி சதவீதம்95.இதில்450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள்11 பேர்.400 மதிப்பெண்களுக்கு மேல்பெற்றவர்கள்47 பேர். இது அரசு பள்ளியில் ஈடு இணையில்லாத சாதனை ஆகும்.
அறிவியல்பாடத்தில்9 மாணவர்கள், சமூக அறிவியலில்8மாணவர்கள், கணிதத்தில்1 மாணவர்கள் என தனித்தனி பாடப்பிரிவில்100க்கு100 பெற்ற மாணவர்களின்எண்ணிக்கை வருடா வருடம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
தேர்ச்சிஅற்ற மாணவர்கள்7 பேர் தான் இந்த7 பேரும் குடும்ப சூழ்நிலையால் பள்ளிக்குவராத மாணவர்கள். அவர்கள் வருவதற்கான நடவடிக்கை எடுத்தும், கடைசி நேரத்தில்தீவிர பயிற்சி அளித்தும் பயன் இல்லை என்பது தான் வருந்தத்தக்கது.
மேல்நிலைத்தேர்வு:-
2014 - 2015 ஆம் கல்வி ஆண்டில்12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி94 சதவீதம்.இதில் முதல் மதிப்பெண் பெற்றவர் மாணவி ஜீவா1118 மதிப்பெண்கள்.1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள்11 பேர்.
பாடப்பிரிவுகள்:-
அறிவியல்:-
மேல்நிலையில்உயிரியல், கணிதம், இயற்பியல், வேதியியல் ஒரு பிரிவும், கணிப்பொறியியல், கணிதம், இயற்பியல், வேதியியல்என்ற மற்றொரு பிரிவும்செயல்படுகின்றது. கலை:-
புள்ளியியல், வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல் ஒரு பிரிவும், கணிப்பொறியியல், வணிகவியல், பொருளியல்,கணக்குபதிவியல் என்ற மற்றொரு பிரிவும்செயல்படுகின்றது.
ஓவியம்:-
குழந்தைகளின்தனித்திறமையை கண்டுகொண்ட ஆசிரியர்கள் அவர்களை ஊக்கப்படுத்தி பலபோட்டிகளில் கலந்து கொள்ளவைத்து பல பரிசுகள் பெற அந்த குழந்தைகளை மிகஊக்கபடுத்தியதன் விளைவாக ச.பூஜா என்ற மாணவி மாவட்ட அளவில் வெற்றி பெற்றுஆட்சியரிடம், பாராட்டும் பரிசு பெற்றுள்ளார்.
விளையாட்டு:-
விளையாட்டுக்குஎன்று தனி நேரத்தை ஒதுக்கி விளையாடும் போது மாணவர்கள் உடல் அளவிலும், மனஅளவிலும் வலிமை பெறுகிறார்கள். இவர்களுக்கு ஊக்கம் அளித்து திறமையை கண்டுபிடித்த போதுதான் கிடைத்தார் சரவணன் என்ற மாணவர். இவருக்கு சரியானபயிற்சியும், போதிய அனுகுமுறையும் அளித்தன் பேரில் இன்று அவர் தேசிய அளவில்குண்டு எறியும் போட்டியில்2 ம் பெற்றுள்ளார் என்பது பாரட்டத்தக்கது.
மன்றங்கள்:-
படிப்பைதவிர மாணவர்கள் மற்ற துறையிலும் முன்னேற வேண்டும் தங்களுக்கு பிடித்தமானதுறையில் நிறைய அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக துவக்கப்பட்டது தான்மாணவர் மன்றங்கள்.
தமிழ். ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாடம் சம்பந்தப்பட்ட மன்றங்கள் இயங்குகின்றன. இது தவிரதேசிய பசுமைப்படை, சுற்றுச்சுழல், செஞ்சுலுவைச்சங்கம்,நுகர்வோர் மன்றம், சாரணர் இயக்கம், நாட்டுநலப்பணி திட்டம்,தொண்மைக்குழு, சாலை பாதுகாப்புஇயக்கம், உடல் நல மன்றங்கள் என மாணவர்களின் அறிவை மேம்படுத்தும் வகையில்செயல்பட்டுவருகின்றன.
அரசு நலத்திட்டங்கள்:-
அரசால்அளிக்கப்பட்ட அனைத்து திட்டங்கள் மற்றும் பொருட்கள் சேவைகள்அனைத்தையும் முறைப்படி6 முதல்12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குபெற்றுத்தரப்படுகிறது. சிறப்பு ஊக்கத்தொகை10,11 மற்றும்12ம் வகுப்புமாணவர்களுக்குபெற்றுத்தரப்படுகிறது.
சிறப்பு பயிற்சிகள்:-
தேசியதிறனாய்வுக்கான சிறப்பு பயிற்சி, தினசரி சிறப்பு பயிற்சிவகுப்புகள், இசை, ஓவியம், தையல், யோகா, கராத்தே, சுற்றுச்சூழல்,வாழ்க்கைகல்வி போன்ற சிறப்புபயிற்சிகள் அளிக்கப்படுகின்றது.
உயர்தரம்மிக்க ஆய்வகங்கள், உயர்தர செயல்பாட்டுடன் கூடிய கணிணி ஆய்வகங்கள், சிறந்தபல அறிஞர்களின் பொக்கிசமான நூலகம் ஆகியனசிறப்புடன்செயல்படுகிறது. சிறந்த விளையாட்டுமைதானம் உண்டு. செம்மைப்படுத்தப்பட்டகாற்றோட்டமிக்கவகுப்பறைகள், சுத்தமான குடிநீர், மாணவ மாணவியருக்கு மேம்படுத்தப்பட்ட கழிப்பறைவசதிகள் என அனைத்து வசதிகளையும் கொண்டு சீருடனும், சிறப்புடனும் செயல்படுகிறது இந்த அரசுப்பள்ளி.
தகுதிவாய்ந்த, பல வருடங்களை அனுபவங்களாக கொண்டஆசிரியர்களையும், தற்போது தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களையும், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுசெய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களையும் கொண்டு செயல்படுகிறது. அனுபவமும், இளைமையும்இணைந்து பல நல்ல இளைஞர்களை நம் நாட்டுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறது.