நமது காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி1962ம் ஆண்டு ஜீன் 18ம் தேதி துவங்கப்பட்ட பள்ளி தான் நமது காளப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி. மாணவர்களுக்கான பயிற்சியையும்நம் பள்ளியில் கொடுக்கும் ஊக்கத்தையும் கண்டு 2006 ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக விளங்குகிறது நம் அரசு பள்ளி. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குடும்ப சூழ்நிலைகாரணமாக பள்ளிக்கு வருவது குறைந்து வந்தாலும் நமது ஆசிரியர்களும்தலைமை ஆசிரியரும் எடுத்த சீரிய முயற்சியில் பல மாணவர்களுக்கு படிக்கும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது நம் காளப்பட்டி அரசு பள்ளி.

நம் பள்ளியில் படிப்பை மட்டும் சொல்லித்தராமல் எவ்வாறு படிக்க வேண்டும்என்ன படித்தால் எந்த நிலையை அடையளாம் என்றும்என்னென்ன படிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு கற்றுத்தருகின்றனர் நமது ஆசிரியர்கள்.

படிப்பை தவிர விளையாட்டிலும் நம் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து அவர்கள் பல போட்டிகளில் வெல்லவும் உறுதுணையாக நிற்கின்றனர் ஆசிரியர்கள். விளையாட்டுமேல் படிப்பிற்கும் அரசு பதவிகளுக்கும் எவ்வாறு உதவும் என உணர்த்தும் ஆசிரியர்களை கொண்டது நம் பள்ளி.

பாடப்பிரிவுகள்:-

அறிவியல்:-

மேல்நிலையில் உயிரியல்கணிதம்இயற்பியல்வேதியியல் ஒரு பிரிவும்கணிப்பொறியில்கணிதம்இயற்பியல்வேதியில் என்ற மற்றொரு பிரிவும் செயல்படுகின்றது.

கலை:-

புள்ளியியல்வணிகவியல்பொருளியல்கணக்குப்பதிவியல் ஒரு பிரிவும்கணிப்பொறியியல்வணிகவியல்பொருளியல்,கணக்குபதிவியல் என்ற மற்றொரு பிரிவும் செயல்படுகின்றது.

வியம்:-

குழந்தைகளின் தனித்திறமையை கண்டுகொண்ட ஆசிரியர்கள் அவர்களை ஊக்கப்படுத்தி பல போட்டிகளில் கலந்து கொள்ளவைத்து பல பரிசுகள் பெற அந்த குழந்தைகளை மிகஊக்கபடுத்தியதன் விளைவாக ச.பூஜா என்ற மாணவி மாவட்ட அளவில் வெற்றி பெற்று ஆட்சியரிடம்பாராட்டும் பரிசு பெற்றுள்ளார்.

விளையாட்டு:-

விளையாட்டுக்கு என்று தனி நேரத்தை ஒதுக்கி விளையாடும் போது மாணவர்கள் உடல் அளவிலும்மன அளவிலும் வலிமை பெறுகிறார்கள். இவர்களுக்கு ஊக்கம் அளித்து திறமையை கண்டு பிடித்த போதுதான் கிடைத்தார் சரவணன் என்ற மாணவர். இவருக்கு சரியான பயிற்சியும்போதிய அனுகுமுறையும் அளித்தன் பேரில் இன்று அவர் தேசிய அளவில் குண்டு எறியும் போட்டியில் ம் பெற்றுள்ளார் என்பது பாரட்டத்தக்கது.

மன்றங்கள்:-

படிப்பை தவிர மாணவர்கள் மற்ற துறையிலும் முன்னேற வேண்டும் தங்களுக்கு பிடித்தமான துறையில் நிறைய அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக துவக்கப்பட்டது தான் மாணவர் மன்றங்கள்.
தமிழ். ஆங்கிலம்கணிதம்அறிவியல்சமூக அறிவியல் என பாடம் சம்பந்தப்பட்ட மன்றங்கள் இயங்குகின்றன. இது தவிரதேசிய பசுமைப்படைசுற்றுச்சுழல்செஞ்சுலுவைச்சங்கம்,நுகர்வோர் மன்றம்சாரணர் இயக்கம்நாட்டுநலப்பணி திட்டம்,தொண்மைக்குழுசாலை பாதுகாப்பு இயக்கம்உடல் நல மன்றங்கள் என மாணவர்களின் அறிவை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டுவருகின்றன.

அரசு நலத்திட்டங்கள்:-

அரசால் அளிக்கப்பட்ட அனைத்து திட்டங்கள் மற்றும் பொருட்கள் சேவைகள் அனைத்தையும் முறைப்படி முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பெற்றுத்தரப்படுகிறது. சிறப்பு ஊக்கத்தொகை 10,11 மற்றும் 12ம் வகுப்புமாணவர்களுக்கு பெற்றுத்தரப்படுகிறது.

சிறப்பு பயிற்சிகள்:-

தேசிய திறனாய்வுக்கான சிறப்பு பயிற்சிதினசரி சிறப்பு பயிற்சிவகுப்புகள்இசைஓவியம்தையல்யோகாகராத்தேசுற்றுச்சூழல்,வாழ்க்கைகல்வி போன்ற சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது.

உயர்தரம் மிக்க ஆய்வகங்கள்உயர்தர செயல்பாட்டுடன் கூடிய கணிணி ஆய்வகங்கள்சிறந்த பல அறிஞர்களின் பொக்கிசமான நூலகம் ஆகியன சிறப்புடன் செயல்படுகிறது. சிறந்த விளையாட்டு மைதானம் உண்டு. செம்மைப்படுத்தப்பட்டகாற்றோட்டமிக்க வகுப்பறைகள்சுத்தமான குடிநீர்மாணவ மாணவியருக்கு மேம்படுத்தப்பட்ட கழிப்பறை வசதிகள் என அனைத்து வசதிகளையும் கொண்டு சீருடனும்சிறப்புடனும் செயல்படுகிறது இந்த அரசுப்பள்ளி.

ஆசிரியர்கள்:-

தகுதிவாய்ந்தபல வருடங்களை அனுபவங்களாக கொண்ட ஆசிரியர்களையும்தற்போது தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களையும்ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுசெய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களையும் கொண்டு செயல்படுகிறது. அனுபவமும்அறிவும் இணைந்து பல நல்ல இளைஞர்களை நம் நாட்டுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறது 

இனியும் இந்த சாதனைப் பயணம் தொடரும்

Site maintained by Varn Software Services